தங்கத்திற்கு புது கட்டுப்பாடு: 2021 ஜனவரி 15 முதல் அமல் என மத்திய அரசு அறிவிப்பு!


Posted by-Kalki Teamஅடுத்த ஆண்டு அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க் தரமுத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறை அமலுக்கு வர இன்னும் ஒரு ஆண்டு அவகாசம் இருப்பதால் அதற்குள் நகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் இதனை கடைபிடிக்க தயாராகுமாறு மத்திய அரசு அறிவிறுத்தியுள்ளது.

மேலும் பதிவு பெற்ற நகை வணிகர்கள் மட்டுமே தங்க நகைகள், கலைப்பொருட்களை அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முறை அமலுக்கு வந்தால் தங்க நகைகளை 14, 18 மற்றும் 22 காரட் தரத்தில் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இப்போது விற்பனை செய்யப்படுவது போல் 10 ரகங்களில் விற்பனை செய்ய முடியாது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை பெற்ற நகைகளை மட்டுமே நகை வணிகர்கள் விற்க முடியும் என மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதால் தங்கநகை விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுPost Comment

Post Comment