10 ரூபாயில் சென்னை முழுவதும் சுற்றுலா..! சுற்றுலா துறையின் அதிரடி அறிவிப்பு..!


Posted by-Kalki Teamஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு சில காரணிகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சுற்றுலாத்துறை.

இந்த துறையின் மூலம், வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரித்து, அந்நிய செலவானியை உயர்த்த முடியும்.

மேலும், இந்தத்துறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதத்தினையும், வேலைவாய்ப்பில் 8.78 சதவீதத்தினையும் உள்ளடக்கியிருக்கிறது.

இந்தியா ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும், 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுலாத் துறையானது 2008 ஆம் ஆண்டில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. 2018-ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 9.4 சதவீதமாக அதிகரித்து 275.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தயை சிறப்புமிக்க இந்த துறையின் மேம்பாடு கருதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பயணிகள் ரூபாய் 10 கட்டணம் செலுத்தி, பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு, சென்னையின் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியும்.

அதாவது பயணி ஒருவர் ஒரே ஒரு முறை பயணச்சீட்டை பெற்றுவிட்டு, எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கே வேண்டுமானாலும் இறங்கலாம்.

புத்தாண்டு தினத்தன்று மட்டும் பயணிகள் இந்த சலுகையை பெற முடியும். காலை 9 மணிக்கு தொடங்கப்படும் இந்த சலுகை, மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து தீவுத்திடல், மெரினா, பெசன்ட் நகர் தேவாலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் உட்பட சென்னையின் பல்வேறு முக்கிய சுற்றுலா தளங்களை பார்க்கலாம் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

சுற்றுலா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, மக்களிடையே எவ்வளவு வரவேற்பு பெரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..,

- மா.கார்த்திக்


Post Comment

Post Comment