100 நாட்கள் தூங்கினால்... ரூ. 1 லட்சம் சம்பளம்... மெத்தை நிறுவனம் அறிவிப்பு !


Posted by-Kalki Teamதொடர்ந்து 100 நாட்கள் தூங்கினால் ரூ.1லட்சம் சம்பளம் வழங்குவதாக இந்தியன் மெத்தை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வேக்பிட் இன்னொவேசன் என்ற நிறுவனத்தின் இயக்குநர் சைதன்ய ராமலிங்க கவுடா கூறியதாவது :

நமக்கான வேலை நேரத்தை சரியான விகிதத்தில் நிர்வகிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் நமது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,இந்தச் சோதனைக்காக, 9மணி நேரம் ஆழ்ந்து உறங்கக் கூடியவர்கள் வேண்டும். இப்படி தொடர்ந்து 100 நாட்களுக்கு இரவில் படுத்து குறைந்தது 9 மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் இரவு படுக்கும்போது பைஜமா மட்டும்தான் அணிய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த உறக்கத்தின் போது, கட்டாயம் லேப்டாப், செல்போன் பயன்படுத்தக்கூடாது இவ்விதம் 100 நாட்கள் தொடர்ந்து தூங்கினால், ரு, 1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தார்.Post Comment

Post Comment