Posted by-Kalki Team



தேவையானப்பொருட்கள்:

அரிசி : 1 கப்

துவரம் பருப்பு : 1/2 கப்

சின்ன வெங்காயம் : 10

தக்காளி :1

கடுகு : 1 டீஸ்பூன்

சீரகம் :1 டீஸ்பூன்

பூண்டு : 5பல்

மஞ்சள் தூள் :1/2 டீஸ்பூன்

சாம்பார்தூள் : 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை :சிறிதளவு

கொத்தமல்லிதழை :சிறிதளவு

நெய் :2 டீஸ்பூன்

செய்முறை

1.குக்கரை அடுப்பில் ஏற்றி சூடேற்றி 1 கரண்டி எண்ணெய் 1கரண்டி நெய் ஊற்றி சூடாக்கவும்.

2.கடுகு; சீரகம்;பூண்டு;கறிவேப்பிலை;வெங்காயம் ;தக்காளி அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

3.மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.

4.மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

5.அரிசியையும் பருப்பையும் நன்றாக கழுவி சேர்க்கவும்.

6.தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வைத்து வேகவிடவும்.

7.மூடியை திறந்து 1 கரண்டி நெய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து கலக்கவும்.



Post Comment

Post Comment