திருமணம் கைகூட செய்யவேண்டிய பரிகார முறைகள்...!


Posted by-Kalki Teamதிருமணம் ஆகாத பெண்கள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வரும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தோலில் விளக்கேற்றினால் பெண்களுக்கு திருமணம் கைகூடும். ராகுகால பூஜையைச் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமின்றி வாரத்தின் ஏழு நாட்களும் அன்றைய ராகுகால நேரத்தில் ஒவ்வொரு விதமான மலரைக் கொண்டு அர்ச்சிக்கலாம்.

ராகு கால பூஜை:

கல்யாணமாகாத பெண்கள் வெள்ளி, செவ்வாய், வரும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தோலில் விளக்கேற்றினால் பெண்களுக்கு திருமணம் கைகூடும். திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்குப் புத்திரபாக்கியம் உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியம் பெறுவர். தடைப்பட்ட காரியம் நிறைவேறும்.

கிரகம்: சூரியன்

கிழமை: ஞாயிறுக்கிழமை

மலர்: பாரிஜாதம், வில்வம்.

கிரகம்: சந்திரன்

கிழமை: திங்கட்கிழமை

மலர்: வெள்ளை அலரி.

கிரகம்: அங்காரகன்

கிழமை: செவ்வாய்க்கிழமை

மலர்: செந்தாமரை, செம்பருத்தி

கிரகம்: புதன்

கிழமை: புதன்கிழமை

மலர்: துளசி.

கிரகம்: குரு

கிழமை: வியாழக்கிழமை

மலர்: சாமந்தி

கிரகம்: சுக்கிரன்

கிழமை: வெள்ளிக்கிழமை

மலர்: வெள்ளை அரளி.

கிரகம்: சனி

கிழமை: சனிக்கிழமை

மலர்: சங்குபுஷ்பம்.

பெண்கள் இம்மலர்களை ஒவ்வொரு நாளும் ராகுகாலத்தில் அந்தந்த கிரகத்துக்கு அர்ச்சனை செய்து வந்தால், திருமணம், புத்திரபாக்கியம், அமைதி, சுபிட்சம் இவை யாவும் ஒருங்கே அமையப் பெறும்.Post Comment

Post Comment