புத்தி கூர்மை பெற உதவும் மாதங்கி முத்திரை...!!


Posted by-Kalki Teamகல்வியில் சிறந்து விளங்க முத்திரைகள் உள்ளது. அவை மாதங்கி முத்திரை ஆகும். மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.

இரண்டு கை விரல்களையும் கோர்த்து உள்ளங்கை பதிகள் இரண்டும் நன்றாக தொட்டபடி இருக்கவேண்டும். இரண்டு கைகளின் நடுவிரலை மட்டும் நேராக நீட்டவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் 20 நிமிடங்கள் செய்யலாம். இந்த முத்திரை மூளையில் உள்ள ஹைபோ தாலஸ் நரம்பு பகுதியை சீராக செயல்பட வைக்க கூடிய வல்லமை உடையது.

வயிறு, மார்பு பகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யும். மன அழுத்தத்தை குறிக்கும். சர்க்கரையின் அளவை இரத்தத்தில் சரியாக வைக்க உதவும்.

அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து செய்து முடிக்கும் திறனையும், பயம், பதற்றத்தையும் சரிசெய்யும். மேலும் பேச்சு திறன் வாக்கு வல்லமை, ஞாபக சக்தி, படிக்கும் திறனை அதிகரிக்கும். இந்த முத்திரை தொடர்ந்து செய்து வந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம். மேலும் புத்தி கூர்மை பெறும்.Post Comment

Post Comment