வீட்டில் செல்வம் பெருக எளிய பரிகாரங்கள்!!


Posted by-Kalki Teamகாலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும். 2.குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும் பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம்பிடிப்பால் பின்தான் லட்சுமி வருவாள்.

பின் பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் எனஅழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லக்கூடாது அது தட்டுபாட்டுக்கு உரியசொல்.

இரவில் தயிர் சேர்த்துகொள்ளக் கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.

பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும் இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.

வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்)படம் வைக்கவேண்டும்,இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்

மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும்கட்டாயம் வைக்கவேண்டும். படத்திற்க்கும், கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும்.

பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்

லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல ஓம் ஐஸ்வரேஸ்வராய நம என்றாவது கூறவேண்டும்.Post Comment

Post Comment