பிரசவ தழும்புகளை எளிதில் நீக்கும் அற்புத குறிப்புகள்.....!!


Posted by-Kalki Teamஇளவயதில் தாயாகும் பெண்களுக்கும் இந்தத் பிரசவ தழும்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்றே அதிகம். கர்ப்பக்காலத்தில் அதிக எடை உடையவர்களுக்கும், ஒன்றுக்கு மேலான குழந்தைகளைச் சுமப்பவர்களுக்கும், வயிற்றில் உள்ள குழந்தையின் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும், பனிக்குட நீரானது அளவுக்கு அதிகமாக இருப்பவர்களுக்கும் கர்ப்பத்தின் போதான தழும்புகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

சிவந்த சரும நிறம் கொண்டவர்களுக்கு லைட் பிங்க் நிறத்திலும், கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு அவர்களது சருமத்தை விட சற்றே வெளிர் நிறத்திலும் தழும்புகள் உருவாகும்.

இந்த தழும்புகள் பெரும்பாலும் கருவுற்ற சுமார் 6 வது மாதத்திற்கு பின்னர் ஏற்பட துவங்கி, பிரசவத்திற்கு பின்னர் தொடர்கிறது. இந்த பாதிப்பானது இளம் வயதில் தாயாகும் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

கற்றாழை ஜெல்லை தழும்பு உள்ள இடத்தில் தினமும் 2-3 முறை தடவி வர, அதில் உள்ள குணப்படுத்தும் உட்பொருட்கள், அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்து தழும்பை மறையச் செய்யும்.

வைட்டமின் ஈ சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே வைட்டமின் ஈ கேப்சூல்களை வாங்கி, அதனுள் உள்ள எண்ணெயை தழும்பு உள்ள இடத்தில் தினமும் தடவி வர, விரைவில் தழும்புகள் மறையும்.

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, தழும்புகளை மறையச் செய்யும். எனவே எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து பஞ்சில் நனைத்து, தழும்புள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, பின் எண்ணெய் தடவ வேண்டும்.

டீ போடப் பயன்படுத்திய டீ பேக்கை தழும்பு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இதனால் அதில் உள்ள காப்ஃபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை புதுப்பித்து தழும்புகளை மறையச் செய்வதோடு, சருமத்தை பாதுகாப்புடனும் வைத்துக் கொள்ளும்.Post Comment

Post Comment