2019 குருப்பெயர்ச்சியில் 12 ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பரிகாரம்!


Posted by-Kalki Team2019-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி அக்டோபர் 29-ம் தேதி தேதியான இன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்தார். பெயர்ச்சியாகியுள்ள குருப்பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்தால் குருபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மேஷ ராசி

ஸ்வாமி மலை முருகன் கோயிலுக்குச் சென்று வருவது நல்ல பரிகாரமாக இருக்கும். முடியாதவர்கள் அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் சென்று வரலாம்.

ரிஷப ராசி

தினசரி அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று வரலாம். அதேவேளையில் 108 திவ்ய தேசங்களில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி திருக்கோயிலுக்குச் சென்று வருவதும் பெரிய பரிகாரமாக இருக்கும்

மிதுன ராசி

திருமணச்சேரி அருகிலுள்ள மேலக்கோயில் ஐராவதேஷ்வரர் கோயிலுக்குச் சென்று வருவது மிகப்பெரிய பாக்கியத்தைத் தரும். அருகிலுள்ள சிவன் ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமானை வணங்குவதும் நல்ல பரிகாரமாக அமையும்.

கடக ராசி

அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வர சிவகங்கை அருகில் உள்ள பாகம்பிரியாள் பழம்புற்றுநாதர் ஆலயத்திற்குச் சென்றுவருவது சிறந்த பரிகாரமாகும்.

சிம்ம ராசி

தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதும், அருகில் உள்ள சிவன் ஆலயத்துக்குச் சென்று வருவதும் நல்ல பரிகாரமாக இருக்கும்.

திருவிழிமலையில் உள்ள சிவன் பார்வதியை தரிசித்து வருவது சிறந்தது.

கன்னி ராசி

குலதெய்வ, காவல் தெய்வ வழிபாடு செய்து வரலாம். மேலசிவல் அருகில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு.

துலாம் ராசி

தினசரி அம்மன் ஆலயத்திற்குச் சென்று வரலாம். ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள நந்தனூர் பஞ்சமுக ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது நன்மையளிக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் உளுந்து வடை, வெண்ணெய் சாற்றி வரலாம்.

விருச்சிக ராசி

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வரலாம். செவ்வாய்க்கிழமையில் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நன்மையைத் தரும்.

தனுசு ராசி

அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வருவது நல்ல பரிகாரமாக அமையும். மதுராந்தகம், எரிகாத்த ராமர் கோயிலில் நடைபெறும் திருமஞ்சனத்தில் கலந்துகொண்டு அர்ச்சனை செய்துவரத் தடைகள் நீங்கும்.

மகர ராசி

காவல் தெய்வங்களை வழிபடுவது மிகச் சிறந்ததாகும்.

தாராபுரம் அனுமந்தபுரம் சென்று அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது நல்ல பலன் அளிக்கும்.

கும்ப ராசி

அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று பெரிய பரிகாரமாகும். முடிந்தவர்கள் பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சைப் பழம் மாலை சாற்றி வரலாம்.

மீன ராசி

மீன்களுக்கு உணவிடுவது நல்ல பரிகாரமாகும். கடலோரத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று வரலாம். கந்தசஷ்டி பாராயணம் செய்து திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானைத் தரிசித்து வரலாம்.Post Comment

Post Comment