அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடங்கியது


Posted by-Kalki Teamபுதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவு ெதாடங்கியுள்ளது. யாத்திரை செல்ல விரும்பும் யாத்ரீகர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி ஆகியவற்றில் பதிவு செய்து கொள்ளலாம்.13 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாத்திரைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். யாத்திரை செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் தங்களது விண்ணப்பத்துடன் உடல்தகுதி சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.


Post Comment

Post Comment