கருட பகவான் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்...!!


Posted by-Kalki Teamஸ்ரீ கருட பகவானுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, கதிர்ப்பச்சை சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

கருட பெருமான் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் ஒரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். காஞ்சியில் கருட சேவையை அதிகாலையில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

ஞானம், பலம், ஐஸ்வர்யம், விர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார்.

திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி, ப்ராகாம்யம் ஆகிய எட்டு விதமான சமப்த்துக்களாக இருந்து கொண்டு, பக்தர்களுக்கு அவர்றைத் தருபவராக ஸ்ரீ கருடன் விளங்குகிறார்.

கருடனுக்கும் சார்பர்ணன் என்றொரு பெயருண்டு. கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி.

கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.Post Comment

Post Comment