வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலை - மக்கள் அதிருப்தி !


Posted by-Kalki Teamவெங்காயத்தின் விலை உயர்ந்ததை அடுத்து இப்போது தக்காளியின் விலையும் கணிசமாக உயர்ந்திருப்பது மக்களுக்கு சுமையாகியுள்ளது.

மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மழையின் காரணமாக உற்பத்தி குறைந்தது.வெளிமாநிலங்களில் இருந்து வெங்காய வரத்துக் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காய விலை அதிகமானது. சில இடங்களில் 100 ரூபாய் வரை விற்கும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்து நிலைமையை ஓரளவு சமாளித்தது. அதையடுத்து வெங்காய விலை கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் அடுத்ததாக தக்காளியின் விலை அதிகமாகி வருவது பொதுமக்களுக்கு சுமையாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 40 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை தற்போது 54 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் 54 ரூபாயாகவும், கொல்கத்தாவில், 60 ரூபாய்க்கும் டெல்லியில் ஒரு கிலோ ரூ.80 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.


Post Comment

Post Comment