உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்:


Posted by-Kalki Teamபொதுவாக சிலருக்கு வாய்ப்பகுதியை சுற்றி கருமையடைந்து காணப்படுவதுண்டு. இது முக அழகினை கெடுத்து விடுகின்றது. வாயின் அருகே மென்மையான தன்மை என்பதால் சூரிய ஒளி படும்போது மெலனின் ஹார்மோன் விரைவில் தூண்டப்பட்டு கருமையடையச் செய்துவிடும்.

இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இறந்த செல்கள் அங்கே குவிந்து, அந்த கருமையை போகவிடாமல் செய்துவிடும். இதனை நாம் சமையலறை பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும். தற்போது

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 டீஸ்பூன்

தக்காளி சாறு - 1 டீஸ்பூன்

தயிர் - அரை டீஸ்பூன்

செய்முறை

தக்காளி பெரிய துவாரங்களை சுருக்க செய்யும். அழுக்குகள், செல்கள் தங்காது. அதோடு நிறத்தையும் வெளுக்கச் செய்யும் குணமுண்டு. தயிர் ஈரப்பதத்தை அளிக்கும், கருமையையும் நீக்கும்.

ஓட்ஸ் இறந்த செல்களை நீக்கும் இயற்கையான ஸ்க்ரப். சுருக்களை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும்.

ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.


Post Comment

Post Comment