ஆவணி மாத பௌர்ணமி .... கிரிவலம் செல்ல உத்தமமான நேரம்....


Posted by-Kalki Teamஆவணி மாதத்தில் பௌர்ணமி 13.09.19 காலை 07. 35 am முதல் மறுநாள் 14.09 .19 (சனிக்கிழமை ) காலை 10.02am வரை வருகிறது . இந்த நல்ல நாளை நாம் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு பயன்படுத்தி நம் வாழ்வில் பதினாறு பேறுகளையும் பெற்று சிறப்புடன் வாழ்வோமாக.

பௌர்ணமி நாளில் மகாலட்சுமி பூஜை செய்யவும், சத்யநாராயணா பூஜை செய்யவும் குருபூஜை செய்வதற்கும்மிகவும் நல்லது. இந்த பவுர்ணமி திதியில் நமது வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இறைவழிபாடு செய்வது, அன்னதான குழு பங்கேற்பது மற்றும் பசு மடங்களில், பழம், கீரை அளிப்பது நமது வாழ்வில் செல்வத்தைச் சேர்க்கும் வெற்றியை அளிக்கும்.

அருகில் இருக்கும் திருக்கோவிலில் இரண்டு தீபங்கள் ஏற்றி இறைவழிபாடு செய்வது மென்மையை தரும். இந்த திருநாளை சிறப்பாக பயன்படுத்திஇறை அருளை பெறுவோமாக.Post Comment

Post Comment