ஸ்ரீ புதுபட்டி மாரியம்மன் திருத்தேர் திருவிழா...


Posted by-Kalki Teamசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னகிருஷ்ணாபுரம் ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ புதுபட்டி மாரியம்மன் திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

மகாமாரியம்மன் கோவிலிருந்து இருந்து வழக்கம் போல அருமிகு பாலதண்டாயுதபாணி சுப்பிரமணியர் ஆலயம் அருகில் மாலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டது, பின்னர், மறுநாள் மாலை சுமார் 5 மணியளவில் பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நடு வீதி, வடக்கு வீதி மூலமாக மாரியம்மன்கோவில் திடலில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த விழாவின் முன்னதாக 50 திற்கும் மேற்பட்டோர் அழகு குத்தல், 20 திற்கும் மேற்பட்டோர் கரகம் எடுத்தல் , திருநங்கைகள் நடனம், தீவளையத்தில் தீ மிதித்து நடனம், உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் நடைபெற்றது.


Post Comment

Post Comment