சுவையான பீட்ருட் வடை செய்ய...!!


Posted by-Kalki Teamதேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்

கடலை பருப்பு - 1/2 கப்

காய்ந்த சிவப்பு மிளகாய் - 5

சோம்பு - 1/2 தேக்கரண்டி

கல் உப்பு - தேவையான அளவு

இஞ்சி - சிறிதளவு பொடிதாக நறுக்கியது

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2 பொடிதாக நறுக்கியது

பீட்ருட் - 1 (நைசாக சீவிக்கொள்ளவும்)

கருவேப்பிலை - சிறிதளவு பொடிதாக நறுக்கியது

எண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை:

முதலில் துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பை சுத்தமாக கழுவி இரண்டு மணிநேரம் ஊறவைத்து, மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்பு ஐந்து காய்ந்த மிளகாய், 1/2 தேக்கரண்டி சோம்பு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் மிக்சியில் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் ஒன்னிரண்டாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அரைத்த மாவை ஒரு பௌலில் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, நைசாக துருவிய பீட்ருட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறிய சிறிய வடையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான பீட்ருட் வடை தயார்.Post Comment

Post Comment