வீட்டில் பூஜை அறையில் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது...?


Posted by-Kalki Teamவீட்டின் பூஜை அறையில் தெய்வ படங்களை தெற்கு திசையை நோக்கி கண்டிப்பாக வைக்கக்கூடாது. முதன்மையாக கிழக்கு பக்கத்தில் தெய்வ படங்களை வைக்கலாம். மேலும் பூஜை அறையில் கோலம் போட்டிருப்பது அவசியம்.

பூஜை அறை இல்லை என்றாலும், இருக்கும் இடங்களில் அலமாரியிலும் படங்களை வைத்து ஸ்க்ரீன் போட்டு மூடி வைத்துக் கொள்ளலாம். மேலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதற்கு மண் விளக்கு அதாவது அகல் விளக்கு ஏற்றுவது நல்லது. எத்தனை எண்ணிக்கையில் விளக்கு ஏற்றவேண்டும் என்றால், இரண்டு விளக்குகள் ஏற்றுவது நல்லது. தீபத்தை அணைப்பதற்கு ஒரு தூண்டுகோல் கொண்டு எண்ணெய்யின் உள்ளே இழுப்பது நல்லது. சிலர் பூக்களை உபயோகிப்பார்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

வீட்டில் சிலைகளை வைத்து பூஜை செய்யலாமா என்ற கேள்வி எழும். அதற்கு சிறிய அளவிலான சிலைகளை பயன்படுத்தலாம். மேலும் பூஜை அறையில் தண்ணீர் வைப்பது அவசியம். பூஜையின்போது நைவேத்தியம் வைத்து வழிபடுவது நல்ல பலன் தரும்.

வெற்றிலை, பழம், பால் வைத்தும் வழிபடலாம். மேலும் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்வதால் நேர்மறை ஆற்றல் வீட்டில் அதிகம் பரவும்.

தீபாரதனை செய்யும்போது எப்போதும் இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றினால் மட்டும் போதும். வலமிருந்து இடமாக சுற்றக்கூடாது.Post Comment

Post Comment