தொட்டா சிணுங்கியின் ஆரோக்கிய நன்மைகள்..!!


Posted by-Kalki Teamஉடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் அளவு காலையில், தயிரில் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

கை, கால் மூட்டு வீக்கம், ஒவ்வாமை, தோல் தடிப்புகள் குணமாக, தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

தொட்டா சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்றுப் புண்ணும் ஆறும்.

தொட்டா சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.

வயிற்றுக்கடுப்பு தீர ஒரு கையளவு தொட்டால் சிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் சாப்பிடவும்.

தொட்டா சிணுங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.

தொட்டா சிணுங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முழுச்செடியையும் இடித்து சாறு எடுத்து, 4 தேக்கரண்டி சாற்றுடன், தேன் கலந்து மூன்று வேளையும் குடிக்கவேண்டும். அல்லது ஒரு கைப்பிடி அளவு இலைகளுடன் சிறிதளவு சீரகம் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிடவேண்டும்.Post Comment

Post Comment