"என்கேபி படம் ஓடக்கூடாதுனு சதி பண்றீங்களா?".. பிரபல நடிகரை டிவிட்டரில் வறுத்தெடுத்த தல ரசிகர்கள்!


Posted by-Kalki Teamநேர்கொண்ட பார்வை படம் தொடர்பாக ஒரு பதிவு வெளியிட்ட நடிகர் சாந்தனுவை அஜித் ரசிகர்கள் கடுமையாக திட்டி தீர்த்துவிட்டனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் ஹிட்டான இந்த படத்தை தமிழில் இயக்கியிருப்பவர் எச்.வினோத்.

வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் உலககெமங்கும் இன்று வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களுக்காக அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன.

குறும்படங்களில் கற்றுக்கொண்ட பாடம் சினிமாவிற்கு உதவுகிறது - விஷால் சந்திரசேகர்

தீக்குளிப்பு

தீக்குளிக்க முயற்சி

சென்னை சத்யம் திரையரங்கில் அதிகாலை காட்சிக்கு இயக்குனர் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு சென்றிருந்தார். அப்போது அங்கு ஒரு அஜித் ரசிகர் டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக தீக்குளிக்க முயன்றிருக்கிறார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் சாந்தனு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சாந்தனு

சாந்தனுவின் டிவீட்

அதில், "எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. சத்யம் தியேட்டரில் எனக்கு அருகில் இருக்கும் ஒருவர் டிக்கெட்டி கிடைக்கவில்லை என்பதற்காக உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு பத்த வைப்பதற்காக தீக்குச்சியை தேடிக்கொண்டிருக்கிறார். தல மட்டுமல்ல வேறு எந்த நடிகரும் இதை ஊக்குவிக்க மாட்டார்கள். ஒரு பட டிக்கெட்டுக்காக உங்கள் வாழ்க்கையை விடுவீங்களா. போலீஸ் அவரை கைது செய்துவிட்டது", என தெரிவித்திருந்தார்.

திட்டம்

ஓடவிடாம ஆக்கனுமா?

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் சாந்தனுவை திட்ட தொடங்கிவிட்டனர். "படம் ரிலீசாகும் நேரத்தில் இது போல் எதிர்மறையான செய்தி பரப்பி படத்தை ஓடவிடாம ஆக்கனும், அது தான உங்க பிளான்", என ஒருவர் கேட்டுள்ளார்.

வேடிக்கை

வேடிக்கை பார்க்கலாமா?

"உனக்கு பக்கத்துல நிற்கும் ஒருத்தன் தற்கொலை முயற்சி செய்யுறான். ஆனா நீ அதை தடுக்காம நின்று வேடிக்கை பார்ப்பதும் இல்லாம டிவீட் வேற போடுற. அவன் குடிகாரனாக்கூட இருக்கலாம். நீ ஏன் அவனை தடுக்கல. தயவு செய்து நேர்கொண்ட பார்வை படம் பார்த்து, இந்த சமூகத்தின் மீது அக்கறையை வளர்த்துகொள்", என ஒருவர் நறுக்கென பதிவிட்டுள்ளார்.

வேண்டுகோள்

கேலி செய்யாதீங்க...

அஜித் ரசிகர்களுக்கு பதில் அளித்த சாந்தனு, "இந்த விவகாரம் பற்றி யாரும் கேலி செய்ய வேண்டும். ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நான் அந்த சம்பவம் பற்றி பதிவிட்டேன். மற்றப்படி படம் குறித்து தவறான செய்தி பரப்ப வேண்டும் எனும் நோக்கம் எனக்கில்லை.

பதிலடி:

சாந்தனு பதிலடி:

ஒருவருடைய வாழ்க்கை இதில் சம்மந்தப்பட்டுள்ளது. அதை வைத்து கேலி செய்து சுகம்காண வேண்டாம். ஒரு என்பது அதை பார்த்து அனுபவித்து மகிழ்வதற்காக மட்டுமே. இதுபோல் செய்வதற்காக அல்ல. படம் பார்த்து என்ஜாய் பண்ணுவோம்", என குறிப்பிட்டுள்ளார்.Post Comment

Post Comment