அவல் கேக் :


Posted by-Kalki Teamஅவல்-2 கப் (வெள்ளை அவல்), நெய் - கால் கப், உடைத்த முந்திரி பருப்பு -1 டேபிள் ஸ்பூன், வெள்ளரி விதை -சிறிதளவு, சாரப்பருப்பு- சிறிதளவு, பால் - அரை கப், நறுக்கிய பேரிச்சம்பழம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், துருவிய கொப்பரைத் தேங்காய் - கால் கப், பாதாம் உடைத்தது - சிறிதளவு, சர்க்கரை - ஒன்றரை முதல் 2 கப் வரை, காய்ந்த திராட்சை - 1 டேபிள் ஸ்பூன். கடாயில் நெய்யை காயவைத்து, பருப்பு வகைகளை வறுத்து உடைத்து வைத்துக் கொள்ளவும். பேரிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கம்பிப் பாகு பதம் வரும்போது அதில் வறுத்து உடைத்த பருப்புகள், பேரிச்சம் பழம், ஏலக்காய்த்தூள், துருவிய கொப்பரைத் தேங்காய், நெய், அவல் மற்றும் எல்லா பொருட்களையும் சேர்த்து சுருண்டு வரும்பொழுது இறக்கிவிட வேண்டும்.

நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி ஆறியதும் விருப்பமான வடிவத்தில் துண்டுகள் போடவும். இது ஒரு புதுமையான அவல் கேக். சத்தானதும் கூட. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


Post Comment

Post Comment