சுவையான மற்றும் சத்தான காளான் கிரேவியை கடைகளில் இருக்கும் சுவைபோன்று வீட்டிலேயே வைப்பது எப்படி?.!!


Posted by-Kalki Teamகுழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சாப்பாடை அல்லது பிற உணவுகளை வழங்கினால் அவர்களுக்கு உணவின் மீதான வெறுப்பு ஏற்படும்., சில வழக்கமான உணவு பொருள்களையே மாற்று முறையில் சமைத்து வழங்கினால் அவர்கள் பிற சத்தான உணவை வழங்கினாலும் சாப்பிடுவார்கள்.

காளான் கிரேவி நீங்கள் பலமுறை செய்த போதிலும் இந்த வித்தியாசமான முறை உங்களுக்கு புதுவித சுவையை கொடுக்கும். எனவே, இந்த முறையை பின்பற்றி சமைத்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்.,

எண்ணெய் - தே. அளவு.,

உப்பு - தேவையான அளவு.,

மஞ்சள் தூள் - சிறிதளவு.,

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

வெங்காயம் - 1

தக்காளி - 2

பட்டை - 1 இன்ச்

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 2 சிட்டிகை

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 1

கிராம்பு - 2

செய்முறை:

காளானை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும். கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பட்டை, துருவிய தேங்காய், ஏலக்காய், கிராம்பு, சீரகம், சோம்பு ஆகிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

நன்றாக வதங்கிய பின்னர், அதனை இறக்கி ஆறிய பின்னர், மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின், வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்த மசாலா சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும்.Post Comment

Post Comment