சின்குவேரிம் பீச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது :


Posted by-Kalki Teamசின்குவேரிம் பீச் பரபரப்பு மிகுந்த பகுதியாக இருந்தாலும் கோவாவின் மற்ற கேளிக்கை பகுதிகளோடு ஒப்பிடுகையில் மிகவும் புராதனமும், பேரமைதியும் வாய்க்கப்பெற்றது. இந்த கடற்கரை பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதோடு, வடக்கு கோவாவில் உள்ள கேண்டலிம் கடற்கரையிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது.

சின்குவேரிம் கடற்கரையில் குறைந்த அளவிலான நீர் விளையாட்டுகளில்தான் நீங்கள் ஈடுபட முடியும். அதனால் உங்களுக்கு முகவர்களின் தொந்தரவு ஏதும் இந்தக் கடற்கரையில் இருக்காது. இந்தக் கடற்கரையிலிருந்து 50 அடி உயர அர்வேலம் நீர்வீழ்ச்சியை நீங்கள் சுலபமாக அடைந்து விடலாம்.

அதோடு அர்வேலம் அருவியை அடைந்த பின்பு நேரம் இருந்தால் நீங்கள் அதன் அருகிலுள்ள ருத்ரேஷ்வர் கோயிலுக்கும் சென்று வரலாம். சின்குவேரிம் கடற்கரையில் இருக்கக்கூடிய குடில்களில் குறைந்த விலையில் கிடைக்கும் மதுவோடு நீங்கள் அருமையான கோவான் உணவையும் சுவைத்து மகிழலாம்.

இந்தக் கடற்கரையை கேண்டலிம் பீச்சிலிருந்து வாடகை கார்கள் அல்லது ரிக்ஷா மூலமாக சுலபமாக அடைந்து விடலாம். அதோடு பனாஜி நகரிலிருந்து சின்குவேரிம் வருபவர்கள் பேருந்து அல்லது வாடகை கார்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பனாஜியிலிருந்து பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டால் நீங்கள் சின்குவேரிம் பீச்சை சுற்றிப் பார்ப்பதுடன் கேண்டலிம், அஞ்சுனா, பாகா மற்றும் கலங்கூட் கடற்கரைகளுக்கும் சென்று வரலாம்.Post Comment

Post Comment