வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்..!!!


Posted by-Kalki Teamவரும் 30ம் தேதி அன்று, வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக் கடலில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, ஜூலை ஒன்று முதல் 3 ஆம் தேதி வரை, வடகிழக்கு, கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியா மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வட மேற்கு இந்தியாவில் அடுத்த 4 தினங்களுக்கு வெப்ப நிலை இரண்டில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment

Post Comment