திருநெல்வேலியில் அல்வா மட்டும் அல்ல, நெய் உருண்டையும் பிரபலம் தான்!!


Posted by-Kalki Teamஅல்வா என்ற பெயர் கேட்டாலே நமக்கு நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா மட்டும் தான், ஆனால் இங்கே தயாரிக்கப்படும் மற்றொரு இனிப்பு வகை மிகவும் பிரசித்தி பெற்றது. அது தான் திருநெல்வேலி நெய் உருண்டை.

அப்படி என்ன விசேஷம் இந்த நெய் உருண்டைக்கு?

இந்த இனிப்பு பண்டம் ஏன் இவ்வளவு விசேஷம் என்றால், இதில் சேர்க்கப்படும் பொருட்கள் எல்லாவற்றிலும் அதிக புரத சத்து நிறைந்தே காணப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த இனிப்பை சர்க்கரை வியாதி உள்ளவர்களும் கொடுக்கலாம். இதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாராளமாக மலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் குடுக்கலாம்.

நெய் உருண்டை:

நெய் உருண்டை, ஒரு பிரபலாமான இனிப்பு பண்டமாகும். பல்வேறு வகைகளில், இந்த நெய் உருண்டை கிடைக்கும், ஆனால் அது திருநெல்வேலி நெய் உருண்டைக்கு ஈடு ஆகாது. ஏனென்றால் இதில் சேர்க்கப்படும் பாசிப்பருப்பு , அரிசி மாவு, பொரிகடலை மாவு, கோதுமை மாவு, இவை அனைத்துமே தங்கள் நிலத்தில் பக்குவமாக விளைவித்து, கைகளால் பக்குவமாக தயார் செய்கிறார்கள்

பாசிப்பருப்பு நெய் உருண்டை என்பதால் இது குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். பாசிபருப்பு புரத சத்து அதிகம் கொண்டது, இதனால் குழந்தைகள் மிக வேகமா வளர்ச்சி பெறுவதோடு நல்ல அறிவுடனும் விளங்குவார்கள். இதை செய்வது எளிது என்பதால் அடிக்கடி குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கொடுத்தால் நல்ல பயன் கிடைக்கும்.

திருநெல்வேலி நெய் உருண்டை செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 2 கப்சர்க்கரை - 2 கப்நெய் - 1 கப்பிஸ்தா - 3ஏலக்காய் பொடி - 1 சிட்டிகைமுந்திரி உடைத்தது 50 கிராம்

செய்முறை:

ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணையை ஊற்றி மிதமான சூட்டில், பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக வருக்க வேண்டும். பொன்னிறமாக வறுத்த பின் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவேண்டும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.

பாசிப்பருப்பை போல் சர்க்கரையையும் ஏலக்காயையும் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து கலக்கவும். முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி உருக்கவும்.

நெய் முறிந்துவிடாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். பிடித்ததும் சிறிது நேரம் ஆறவைத்து டப்பாவில் போட்டு வைக்கலாம். சுவையான திருநெல்வலி நெய் உருண்டை தாயார்.Post Comment

Post Comment