வேட்டைக்காரன், சுறாவைத் தொடர்ந்து தெறியைக் கைப்பற்றிய நிறுவனம்


Posted by-Kalki Teamசென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் ஆடியோ உரிமையை திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தெறி. அட்லீ இயக்கியிருக்கும் இப்படம் வருகின்ற தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தெறி படத்தின் ஆடியோ உரிமையை, திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

3 வது முறையாக விஜய் காக்கி அணிவது,ஜி.வி. பிரகாஷின் 50 வது படம் மற்றும் ராஜா ராணி அட்லீ ஆகியோரால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

#thinkmusic has grabbed the audio rights of #GV50 #theri #theriஇசை - G.V.Prakash Kumar (@gvprakash) March 12, 2016

இப்படத்தின் இசை வெளியீடு வருகின்ற 20 ம் தேதி தியாகராய நகரில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாயாகியுள்ளன. இந்நிலையில் தெறி படத்தின் ஆடியோ உரிமையை திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

ஏற்கனவே இந்நிறுவனம் விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்களின் ஆடியோ உரிமையை வாங்கி இருந்தது. தற்போது தெறியின் மூலம் விஜய்யுடன் 3 வது முறையாக திங் மியூசிக் இணைந்திருக்கிறது.

#dubtheristep .. Thoattaa therikka therikka , vettaa vedikka vedikka .. Vaaraaan #therrriiiiii .. Rap Sung and written by @Arunrajakamaraj - G.V.Prakash Kumar (@gvprakash) March 12, 2016

ஜித்து ஜில்லாடி, செல்லாக்குட்டி, ரங்கம்மா, ஈனா மீனா டிகா, என் ஜீவன், தெறி ராப் மற்றும் டப் ஸ்டெப் தெறி ஆகிய 7 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்று உள்ளன.

7 பாடல்கள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Post Comment

Post Comment