மெர்சல் சிறுவனுக்கு பிறந்த நாள் பரிசளித்த விஜய் :


Posted by-Kalki Teamமெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த அக்‌ஷத் என்ற சிறுவனுக்கு விஜய் பிறந்த நாள் பரிசளித்து அவனை நெகிழ வைத்திருக்கிறார்.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் தெறி, மெர்சல் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.

இதில் மெர்சல் திரைப்படம் பல விருதுகளையும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தில் விஜய்யின் மகனாக அக்‌ஷத் என்பவர் நடித்திருந்தார். சிறிய வேடம் என்றாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். நடிகர் விஜய்யை தளபதி 63 படத்தின் படப்பிடிப்புக்கு சென்று அவரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்தை பெற்றிருக்கிறார். சிறுவனை வாழ்த்திய விஜய், பின்னர் சிறிய கேமரா ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார்.


Post Comment

Post Comment