அஜித்தின் அடுத்த படம்: ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி :


Posted by-Kalki Teamமும்பை: நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் எப்படிப்பட்டது என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தை போன்றே அஜித்தின் அடுத்த படத்தையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்நிலையில் போனி கபூர் அஜித் பற்றி பேட்டி அளித்துள்ளார்.

பைக் ரேஸ்

அஜித்

ரேஸ் மற்றும் பிற விளையாட்டுகள் மீது அஜித்துக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்து வியக்கிறேன். நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின்போது தான் அஜித்தை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அஜித்துக்கு வேகம் என்றால் பிடிக்கும். எங்களின் அடுத்த த்ரில்லர் படத்தில் வேகம் இருக்கும். அஜித்தை வைத்து இந்தியில் ஆக்ஷன் படத்தை தயாரிக்க ஆவலாக உள்ளேன் என்கிறார் போனி கபூர்.

ரேஸ்

டூப்

அஜித்தின் அடுத்த படத்தில் ரேஸ் குறித்த காட்சிகள் இருக்கும் என்பது தல ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் அதே சமயம் கவலையையும் கொடுக்கும். காரணம் ரேஸ் காட்சிகளில் டூப் போடாமல் நானே நடிப்பேன் என்று அடம் பிடிப்பார் அஜித். ஏற்கனவே பலமுறை அடிபட்டு, அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட அவர் தன் நிலை தெரிந்தும் ரிஸ்க் எடுப்பாரே.

பாலிவுட்

ஆக்ஷன்

அஜித்துக்கு பாலிவுட் போகும் ஐடியா இருப்பதாக தெரியவில்லை. ஆனால் போனி கபூரோ பேட்டி அளிக்கும்போது எல்லாம் நான் அஜித்தை வைத்து ஒரு இந்தி படத்தை தயாரிக்க விரும்புகிறேன் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஒரு வேளை போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவி மீது வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதையால் இந்தி படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வீரம்

விக்கி கவுஷல்

போனி அஜித்தை பாலிவுட்டுக்கு அழைக்கும் நேரத்தில் அவர் நடித்த வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். வீரம் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரிடம் டேட்ஸ் இல்லாததால் யுரி படம் புகழ் விக்கி கவுஷல் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். லேண்ட் ஆஃப் லுங்கி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை ஃபர்ஹத் சம்ஜி இயக்குகிறார், சஜித் நாதியத்வாலா தயாரிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.Post Comment

Post Comment