துபாய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய உண்மைகள்!


Posted by-Kalki Teamதுபாய் தெற்கு பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மிகவும் அதிவேகமாக வளர்ச்சியடையும் நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. மேலும் இது மிகவும் சிறந்த சுற்றுலாத்தளமாகவும் உள்ளது.

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவை ஒரம் கட்ட வரப்போகும் கிங்டம் டவர்!!!

இதற்கு அங்குள்ள வானளாவிய அழகிய பல கட்டிடங்கள் உள்ளன. பலருக்கும் துபாயில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும். இத்தகைய துபாய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய உண்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

துபாய் மிகவும் பாதுகாப்பான நகரங்களுள் ஒன்று என்று கூறலாம். ஏனெனில் துபாயில் குற்ற விகிதம் மிகவும் குறைவு. அதுவும் 0% என்றே கூறலாம். இதற்கு அங்குள்ள கடுமையான சட்டங்கள் தான் காரணம். துபாயில் வாழ வேண்டுமென்றால் ஒழுக்கத்தை முதலில் கடைப்பிடிக்க வேண்டும்.

நீங்கள் பணக்காரராக விரும்பினால் துபாய்க்கு செல்லலாம். ஏனெனில் இங்கு வருமான வரி என்பதே கிடையாது. இங்கு நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம் மொத்தத்தையும் அப்படியே கையில் பெறலாம்.

துபாய் நாளுக்கு நாள் மிகவும் வளர்ச்சியடைந்து வரும் நகரம். உலகில் உள்ள மிகவும் பெரிய மற்றும் உயரமான கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் துபாயில் தான் உள்ளது. மேலும் ஏற்கனவே கட்டிடங்களை விட பெரிய கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்த காரணத்திற்காக உலகில் உள்ள 20% கிரேன்கள் இங்கு இயக்கப்பட்டு வருகின்றன.

உலகில் உள்ள சில மிக உயரமான மற்றும் பெரிய கட்டமைப்புகள் இங்கு அமைந்துள்ளன. பெரிய மால், உயரமான ஹோட்டல், உலகில் உள்ள மிகப்பெரிய மீன் காட்சியகம் போன்றவை துபாயில் உள்ளது. இந்த காரணத்திற்காகத் தான் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு ஒவ்வொரு வருடமும் வருகைத் தருகின்றனர்.

உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்த நகரங்களுள் ஒன்று துபாய். 1968 இல் 13 கார்கள் இருந்த துபாயில், தற்போது மோசமான அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் அங்குள்ள ஒவ்வொருவரிடமும் கார்கள் இருக்கின்றன. மேலும் இங்கு போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, இங்கு டபுள் டக்கர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

துபாயில் வாழும் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியப்படத்தக்கது. மேலும் இங்கு 17% மக்கள் தான் எமிரேட்ஸை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் வெளிநாடுகளில் இருந்து துபாய்க்கு குடிப்பெயர்ந்தவர்கள்.

உலகின் மிகப் பெரிய தங்க செயின் துபாயில் தான் உள்ளது. இந்த செயின் செய்வதற்கு சுமார் 22 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டது. இந்த செயினின் நீளம் 4.2 கி.மீ ஆகும்.

உலகில் உள்ள மிகவும் உயரமான வானளாவிய கட்டிடங்களுள் சில துபாயில் உள்ளன. அதில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா 2,717 அடி உயரத்தைக் கொண்டது.


Post Comment

Post Comment