சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் போண்டா :


Posted by-Kalki Teamமாலையில் டீ, காபியுடன் சாப்பிட அவல் போண்டா அருமையாக இருக்கும். இன்று இந்த போண்டாவை செய்து எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தட்டை அவல் - ஒரு கப்,

உருளைக்கிழங்கு - ஒன்று,

பச்சை மிளகாய் - 3,

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு,

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,

உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு.

செய்முறை :

அவலை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்து போட்டு அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிரைந்து கொள்ளவும்.

இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு மிதமான சூட்டில், அதிகம் சிவந்து விடாமல் பொரித்தெடுக்கவும்.

சூப்பரான அவல் போண்டா ரெடி.


Post Comment

Post Comment