தொகுப்பாளினி அஞ்சனாவை கரம்பிடித்தார் சந்திரன்!


Posted by-Kalki Teamதொகுப்பாளினி அஞ்சனாவுக்கும், நடிகர் கயல் சந்திரனுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சந்திரன். ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகர் சந்திரனுக்கும், தனியார் டிவி மியூசிக் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக இருக்கும் அஞ்சனாவுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அது நட்பாக தொடர ஒருக்கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினர். இவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ள கடந்த நவம்பர் 29 ம் தேதி சந்திரன்-அஞ்சனா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று(பிப். 10ம் தேதி) அஞ்சனா-சந்திரன் திருமணம், கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலில் எளிமையாக நடந்தது.

இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் திருமணத்தில் பங்கேற்றனர். இன்னும் சில தினங்களில் சென்னையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கின்றனர்.


Post Comment

Post Comment