தொழிலில் ராகு கேதுவால் இனி தடையில்லை! இத மட்டும் செஞ்சா நீங்கதான் அடுத்த அம்பானி


Posted by-Kalki Teamநாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் பற்றி இன்றைக்கு பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும். கால சர்ப்ப தோஷம் சில குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் கால சர்ப்ப யோகமாக மாறும் என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதே நேரத்தில் தொழிலில் தடைகள் பல வந்து உங்கள் வாழ்க்கை ஒரு முன்னேற்றம் காணாமல் இருந்தால், இதை மட்டும் செய்யுங்கள் நீங்கள்தான் அடுத்த அம்பானி.

தொழிலில் பின்னடைவு

லக்னம் எனப்படும் முதல் வீட்டில் ராகு இருக்க கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும்.

திருமணத் தடை

சிலருக்கு திருமணத்தடை இருக்கும். திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை அமைதியாக மாறிவிடும். இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் பொருளாதரப் பின்னடைவு ஏற்படும்.

இதுதான் சிறந்த வழி

இப்படியான பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருபவர்களுக்கு தொழிலில் அதிக முன்னேற்றம் இன்றி சோர்ந்து இருப்பார்கள்.அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்த கோவில்களில் ஒன்றுக்கு சென்று வருவதுதான். அங்கு பரிகாரம் செய்து இறைவனை வழிபட்டால் போதும் நீங்களும் உங்கள் தொழிலில் முன்னேற்றம் கண்டு மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாற்றம் காணலாம். உங்கள் பகுதியில் இருக்கும் கோவிலைத் தேர்ந்தெடுத்து வாரம் ஒருமுறை சென்று வாருங்கள்.

அருள்மிகு அனந்தீஸ்வரர் ஆலயம்

சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி எனும் ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி உடன் அமர்ந்த அனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை எல்லா நாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

காரைக்குடி செஞ்சை அருள்மிகு நாகநாத சுவாமி கோவில்

காரைக்குடியில் செஞ்சை பகுதியில் அருள்மிகு பெரியநாயகி உடன் அமர்ந்த அருள்மிகு நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாக விநாயகரை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

நயினார்கோவில் நாகநாத சுவாமி

பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் அருள்மிகு சவுந்தரநாயகி சமேத அருள்மிகு நாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு சென்று வழிபடலாம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட நாகநாத சுவாமியை வாரம் ஒருமுறை வழிபட்டு வந்தால் தொழில் வளம் பெருகும். லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.Post Comment

Post Comment