ஆண்டவன் கட்டளை... விஜய் சேதுபதியோடு இணைந்தார் ரித்திகா!


Posted by-Kalki Teamஇறுதிச் சுற்று படத்தில் பெரும் பாராட்டுகளை அள்ளிக் குவித்த ரித்திகா சிங், அடுத்து விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இருவரும் இணையும் புதிய படமான ஆண்டவன் கட்டளை நேற்று பூஜையுடன் தொடங்கியது.

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கிறார். இப்படத்தின் சிறப்பு, "படத்தில் பாடல்களே இல்லை. பின்னணி இசை மட்டுமே," என்று படக்குழு சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

நிலைமையைப் பார்த்தீங்களா.. ஒரு காலத்தில் பாடல்கள்தான் படத்தின் ஸ்பெஷல் என்றிருந்த நிலை இப்போது இப்படி மாறிவிட்டது!

கடந்த வருடம் வெளியான காக்காமுட்டை வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பாஸ்மார்க் வாங்கியது.

இவரின் இயக்கத்தில் இளையராஜா இசையில் விதார்த் நடித்த குற்றமே தண்டனை விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் இயக்குநர் மணிகண்டனின் மூன்றாவது படமாக உருவாகிறது ஆண்டவன் கட்டளை.


Post Comment

Post Comment