கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் சோனாக்ஷி சின்ஹா


Posted by-Kalki Teamலிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்த இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி மும்பையில் செயல்பட்டு வரும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் சோனாக்ஷி சின்ஹாவும் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனைக்காக ஒரே இடத்தில் 1,328 பெண்கள் நக பாலிஸ் போட்டுக் கொண்டார்கள். தைவான் நாட்டில் நியூ தைபே என்ற இடத்தில் 1,156 பெண்கள் நக பாலிஷ் போட்டுக் கொண்டது இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை சோனாக்ஷி தலைமையிலான பெண்கள் அணி முறியடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதற்கான சான்றிதழை கின்னஸ் அமைப்பின் அதிகாரி ஜாக்க் பிராங் பேக் சோனாக்ஷியிடம் வழங்கினார்.

"பெண்கள் தினம் கொண்டாடும் அன்று எனக்கு இந்த மரியாதை கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதை என் வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாது" என்று நெகிழ்ந்திருக்கிறார் சோனாஷி.


Post Comment

Post Comment