மனதிற்கும் அமைதி தரும் ஷண்முகி முத்ரா :


Posted by-Kalki Teamஇந்த ஷண்முகி முத்ரா ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.

செய்முறை :

விரிப்பில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். கை மூட்டியைத் தோள் வரை தூக்கி காதுகளை பெருவிரல்களால் மூடிக்கொள்ள வேண்டும்.

ஆட்காட்டி விரல் மூலம், கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நடுவிரல்கள் மூலம் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு இழுத்து வைத்து, விட வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்

இந்த ஆசனம் செய்வதன் மூலம் நரம்பு மண்டலத்திற்கும், மனதிற்கும் அமைதி கிடைக்கும். பதட்டம், எரிச்சல் உணர்வைத் தவிர்க்க உதவும்.


Post Comment

Post Comment