சென்னை கோயம்பேட்டில் சுகாதாரமற்ற 1000 தண்ணீர் கேன்கள் பறிமுதல்


Posted by-Kalki Teamசென்னை கோயம்பேட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1000 சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் தனியார் தண்ணீர் உற்பத்தி நிறுவனங்கள் சுகாதாரமற்ற குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து இன்று சென்னையில் 3 இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே தரமற்ற வகையில் குடிநீர் மற்றும் கேன்கள் இருந்ததால் அங்கிருந்த 500 வாட்டர் கேன்களை பறிமுதல் செய்தனர். மற்ற 2 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 500 கேன்கள் என 1000 தரமற்ற தண்ணீர் கேன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுகாதாரமற்ற தண்ணீர் கேன் விநியோகம் செய்பவர்கள் குறித்து 94 44 04 23 22 என்ற செல்லிடைப் பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.Post Comment

Post Comment