பிரச்சாரம் மேற்கொள்ள மதுரைக்கு புறப்பட்டார் கமல்!


Posted by-Kalki Teamசர்ச்சை பேச்சையடுத்து திண்டுக்கல்லில் தங்கியிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

அரவக்குறிச்சியில், இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன்,சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கமல்ஹாசன் தனது சர்ச்சை பேச்சு காரணமாக 2 நாட்கள் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கொடைக்கானலில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார். தோப்பூர்,பெரியார் நகர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் கமல் திருப்பரங்குன்றத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.Post Comment

Post Comment