முதுகு வலியை குணமாக்கும் பிட்டிலாசானம் :


Posted by-Kalki Teamஇந்த ஆசனம் செய்வதால் முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. முதுகு வலியை குணமாக்குகிறது.

பிட்டிலாசானா என்பது சம்ஸ்கிருத மொழியில் பசுவின் பெயரான பட்டிலா என்பதிலிருந்து உருவானதாகும். பெயரை போலவே நமது உடலையும் பசுவை போல வைத்து இதனை செய்ய வேண்டும்.

செய்முறை :

விரிப்பில் கைகள் இரண்டையும் தரையில் ஊன்றி, கால்களை மடக்கி நன்கு கால்கள் கொண்ட பசுவை போல செய்ய வேண்டும். பின்னர் உங்களின் பின்பகுதியை சற்றே உயர்த்தி, உங்களின் வயிற்று பகுதியை கீழ்நோக்கி தள்ள வேண்டும். தலையை நேராகவோ அல்லது மேல் பக்கமாகவோ உயர்த்தி மூச்சினை மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.

பலன்கள்

இது முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு வலு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. முதுகு வலியை குணமாக்குகிறது.


Post Comment

Post Comment