மயுர்பஞ்ச் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது :


Posted by-Kalki Teamகண் கொள்ள சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளதால் மயுர்பஞ்ச் நகரம் ஓடிசாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு நடக்கும் திருவிழாக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன், எழுச்சியுடன் பய பக்தியோடு கொண்டாடப்படுவதால் சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெகு தூரத்தில் இருந்தும் கூட்டம் கூட்டமாக பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கிறார்கள். இங்கு நடக்கும் சைத்ர பர்வா திருவிழா நாட்டிலிருக்கும் திறமை மிக்கவர்களை ஈர்க்கும். அவர்கள் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் பல பேரை இதில் கலந்து கொள்ள தூண்டும்.

மயுர்பஞ்ச் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

அனைத்து சுற்றுலாப் பயணிகளின் ரசனைக்கேற்ப பல சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது மயுர்பஞ்ச் சுற்றுலா. மயுர்பஞ்சின் தலைநகரமான பரிபடா மற்றும் சிமிலிபல் தேசிய பூங்கா தான் இங்குள்ள இரண்டு பிரதான சுற்றுலாத் தலங்களாகும். மிகச்சிறந்த இயற்கை அழகை கொண்ட டியோகுண்ட் என்ற இடம் சுற்றுலாப் பயணிகளை தன் அழகில் கட்டிப் போட்டு விடும். கிச்சிங் என்ற இடத்தில் உள்ள பழமையான கோவில்கள் சுற்றுலாப் பயணிகளை தொலைந்த உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.

மயுர்பஞ்ச் - கனிமங்களின் சொர்க்கம்!

மயுர்பஞ்சில் கனிம படிவங்கள் அதிகளவில் இருப்பதால் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. கனிம ஆதாரங்கள் அதிகமாக இருப்பதால் மயுர்பஞ்சின் பொருளாதாரமும் அதிகரித்துள்ளது. மயுர்பஞ்சின் நிலப்பரப்பு காட்சியில் ஒரு பகுதியில் அழகிய மலைகளும் அதில் ஓடும் நதிகளையும் கண்டுகளிக்கலாம். இந்த வட்டாரத்தில் அதிக அளவில் கனிமங்கள் இருந்தும், சிமிலிபல் தேசிய பூங்கா இந்த வட்டாரத்தின் இயற்கை வனப்பை சிதைக்காமல் காக்கிறது. அதனாலயே இந்த இடம் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

மயுர்பஞ்ச் - வாழ்க்கையின் கொண்டாட்டம்!

வாழ்க்கையில் கொண்டாட்டத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது மயுர்பஞ்ச். இங்கு நடக்கும் தொடர்ச்சியான திருவிழாக்களும், பொருட்காட்சிகளும் மயுர்பஞ்ச் மக்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இந்த வட்டாரத்தில் அரிசி பொரியை காலை உணவாக பல மக்கள் உண்ணுவதால் அவர்களின் திறன் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. குங்கிலியம் எனப்படும் சால் மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தட்டுகளையும் கிண்ணங்களையும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தனித்துவம் உள்ள நினைவுப் பொருட்களாக அள்ளிச் செல்லலாம். ஒடிசாவில் உள்ள பூரி என்ற இடத்தில் நடக்கும் தேர் திருவிழாவிற்கு அடுத்து பிரம்மாண்டமாக நடைபெறுவது பரிபடாவில் நடக்கும் ரத யாத்திரையாகும். இந்த திருவிழாவின் கொண்டாட்டங்களையும் ஈடுபாடுகளையும் பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது. அதனை சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நேரில் கண்டிப்பாக அனுபவித்தாக வேண்டும். சௌ நுர்ட்யா எனப்படும் ஒரு வகையான நடனம் மயுர்பஞ்சின் கலாசார அனுபவத்தை உணர்த்தும் வகையில் இருக்கும்.

மயுர்பஞ்சை அடைவது எப்படி?

ஒடிசாவில் உள்ள மிகப்பெரிய மாவட்டமாக மயுர்பஞ்ச் உள்ளதால் இங்கு அருமையான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரயில் மற்றும் சாலை வழியாக உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் இங்கே சுலபமாக பயணிக்கலாம். வெள்ளையர்களால் ஒடிசாவில் கட்டப்பட்ட முதல் விமான நிலையம் இந்த இடத்திற்கு அருகில் உள்ளது. இதில் 2 கி.மீ. தூரத்திற்கு ஓடு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

மயுர்பஞ்சிற்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த காலம் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இங்கே வானிலையும் ஈரப்பதமும் இதமாக இருப்பதால் இக்காலத்தில் இங்கு சுற்றுலா வருவதே உகந்த நேரமாக இருக்கும்.Post Comment

Post Comment