ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி ரசம் செய்ய...!


Posted by-Kalki Team



தேவையானவை:

கற்பூரவள்ளி இலை - 5 சுக்கு - ஒரு சிறிய துண்டு மிளகு - அரை டீஸ்பூன் கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு - 2 டீஸ்பூன் தக்காளி சாறு - 2 கப் நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். சுவையான ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி ரசம் தயார்.



Post Comment

Post Comment