இளவட்ட டைரக்டர்கள் பக்கம் திரும்பும் இளையராஜா


Posted by-Kalki Teamபாலாவின் தாரைத்தப்பட்டையோடு ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்து விட்டார் இளையராஜா. இருப்பினும், இப்போதும் அவர் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களுக்கும் பிசியாக இசையமைத்து வருகிறார். தமிழைப்பொறுத்தவரை அப்பா, அம்மா கணக்கு, முத்துராமலிங்கம், களத்தூர் கிராமம், குற்றமே தண்டனை, சில சமயங்களில், கட்டம் போட்ட சட்டை என கிட்டத்தட்ட பத்து படங்கள் வரை இசையமைத்து வருகிறார் இளையராஜா.அந்த வகையில், சமீபகாலமாக இளவட்டம் டைரக்டர்களின் படங்களுக்கு அதிகமாக இசையமைத்து வருகிறார் இளையராஜா. அதேசமயம், சிலர் இளையராஜா சீனியர் என்பதால் அவரிடம் எப்படி நாம் வேலை வாங்க முடியும் என்று தயங்கி நிற்கிற நிலையும் கோலிவுட்டில் உள்ளது.


Post Comment

Post Comment