இந்தியன் 2-க்காக சிவன் கோயிலில் சிறப்பு பூஜை... கமலுக்கு இந்த விஷயம் தெரியுமா?


Posted by-Kalki Teamகமலின் இந்தியன் 2-க்காக சென்னையில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூஜை ஒன்று நடைபெறவுள்ளது.

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தை இயக்குகிறார் ஷங்கர். 2.0 படத்தைப் போலவே இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க, சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படிப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.

பொங்கல் தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு கமல் ரசிகர்களை குஷியாக்கினார் ஷங்கர். முதல் போஸ்டரிலேயே கமலின் மிரட்டலான சேனாபதி கதாபாத்திரம் வர்மக்கலை செய்வது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் பல போட்டோக்களை நேற்று வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினர்.

இந்நிலையில் முதல் பாகத்தை போலவே இந்தியன் 2 படம் வெற்றி பெற வேண்டி, கமல் ரசிகர்கள் சிலர் நாளை சிறப்பு பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேனி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள தீர்த்தபாலேஸ்வரர் கோயிலில் இந்த பூஜை நடைபெறவுள்ளது.

கமலின் மீது உள்ள பிரியத்தால் ரசிகர்கள் செய்யும் வேலை தான் இது. இதற்காக அவரிடம் ரசிகர்கள் ஒப்புதல் எதுவும் பெறவில்லை. தனிப்பட்ட முறையிலேயே இதனை நடத்துகின்றனர்.

ஆனால் நாத்திகரான கமல் இதனை விரும்புவாரா என்பது சந்தேகமே. இருப்பினும் ரசிகர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு கமலும் இதற்கு இசைவு தெரிவிக்கலாம் என்றே தோன்றுகிறது.Post Comment

Post Comment