அதிமுக - அமமுக இணைவு ; மோடியின் கடைசி அஸ்திரம் .


Posted by-Kalki Teamதமிழகத்தில் கூட்டணி குறித்தான் சில முக்கியமான முடுவுகளை மோடி எடுத்துள்ளதாகவும் அது சம்மந்தமாக தமிழக பாஜக தலைவர்களோடு கலந்தாலோசித்துள்ளதாகவும் தெரிகிறது. வடக்கே வானளவு உயர்ந்தாலும் தெற்கே இன்னும் முளைக்காத நிலையில் தான் உள்ளது பாஜக. அதிலும் குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் முளைப்பதற்கு வாய்ப்பே இல்லை எனும் அளவில்தான் உள்ளது. ஆனாலும் விடாது முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறது பாஜக. தமிழகத்தில் வலுவாகக் காலுன்ற தேர்தலில் வலுவானக் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார் மோடி.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளும் அதிமுக அரசுதான் பாஜகவோடு அணுக்கமாக இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணியோடு இணைந்து விட்டதால் அதிமுக வோடு மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் இப்போது உள்ள அதிமுக வோடு கூட்டணி அமைத்தால் மறுபடியும் நோட்டாவுடன்தான் போட்டியிட வேண்டும்.

அதனால் குறைந்தபட்சம் அதிமுக வையும் அமமுக வையும் ஒன்றினைத்தால்தான் அதிமுக தொண்டர்களின் ஓட்டையாவது பெற முடியும் என நினைத்து இருக் கட்சிகளின் இணைவுக்கு நீண்டகாலமாகப் போராடி வருகிறது. ஓபிஎஸ்- ஐ சமாதானப்படுத்தி இணைவுக்கு ஒத்துக்கொள்ள வைத்துவிட்ட போதிலும் ஈபிஎஸ் - ஐயும் தினகரனையும் சமாதானப்படுத்த முடியவில்லை.

தினகரன் ஈபிஸ் மேல் உள்ள கோபத்தால் அவரது முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். அதனால் எரிச்சல் அடைந்த ஈபிஎஸ் தினகரன் தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என அறிவித்துள்ளார். இதனால் இரு தரப்புகள் மீது அம்ப்செட்டில் உள்ளது மோடி அண்ட் கோ.

இதனால் இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தினகரனை வழக்குகளை வைத்து மிரட்டியும் ஈபிஎஸ் -ஐ சமாதானப் பேச்சு மூலமும் வழிக்குக் கொண்டுவர முடிவெடுத்து வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.

இதனால் எப்படியும் மக்களவைத் தேர்தலுக்குள் பாஜக வின் கூட்டணி சம்மந்தமான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.


Post Comment

Post Comment