சைலண்டாக ஜோடி சேரும் மாதவன் -அனுஷ்கா!


Posted by-Kalki Teamமாதவன் - அனுஷ்கா ஜோடியாக கலக்கிய படம் ரெண்டு. இவர்களது கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு இருவரும் எந்த படங்களிலும் ஜோடி சேரவில்லை. அனுஷ்காவும் தெலுங்கு படங்களில் பிஸியாகி விட்டார்.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஈஸியாக உடல் எடையை அதிகரித்த அனுஷ்காவால் மீண்டும் எடையை குறைக்க முடியவில்லை. அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. எடையை குறைக்க அனுஷ்கா வெளிநாடுகளுக்கு சென்று இயற்கை மருத்துவ முறைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மாதவனும், அனுஷ்காவும் சைலன்ஸ் என்ற படத்தில் கரம் கோர்க்கின்றனர். கோனா வெங்கட் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு சவாலான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் அனுஷ்கா தன்னை முழுமையாக தயார்படுத்தி வருகிறாராம். சில ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்களாம்.


Post Comment

Post Comment