திருவட்டாறும் தொங்கும் பாலமும் - ஓர் உலாவில் ஈரிடங்கள் :


Posted by-Kalki Team



திருவட்டாறு தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்றது. இது 108 திவ்யதரிசனங்களில் ஒன்று என்பதால் இந்து பக்தர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது. மேலும் திருவட்டாறில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் கண்கவரும் வண்ணமாக இருக்கின்றன. பாரலீ மற்றும் கோதை என்னும் இரண்டு ஆறுகள் மூவட்டமுகம் என்னும் இடத்தில் இந்த பட்டணத்தை சுற்றி வளைத்து உள்ளன. இதுவே இந்நகரின் பெயர்க்காரணமாக மாறிவிட்டது. திரு என்றால் புனிதம், வட்டம் என்றால் சுற்றியிருப்பது, ஆறு என்றால் நதி, எனவே திருவட்டாறு என்றால் புனித நதிகளால் சூழப்பட்ட இடம் என்று பொருள். சரி இந்த ஊரில் அப்படி என்னவெல்லாம் இருக்கிறது என்பதையும், அருகிலுள்ள மாத்தூர் தொட்டிப் பாலத்தையும் பார்க்கலாம் வாங்க.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

ஆதிகேசவபெருமாள்

புனிதமான அருள்மிகு ஆதிகேசவபெருமாள் கோவில் திருவட்டாறுக்கு தெய்வீக தன்மையை கொடுக்கின்ற, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் ஆகும். மாத்தூர் தொங்கு பாலம், புனித ஜேம்ஸ் தேவாலயம் (100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது), உதயகிரி கோட்டை மற்றும் தீர்பரப்பு நீர்வீழ்ச்சி ஆகியவை மற்ற புகழ்பெற்ற இடங்கள் ஆகும். இந்த பட்டணம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்பதால், சாலை மார்க்கமாக நாட்டின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டு இருப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

பயண வசதிகள்

கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையமே இதற்கு அருகாமையில் இருக்கும் தொடர்வண்டி நிலையம் ஆகும். நெருக்கமான விமான தளம் திருவனந்தபுரம் விமான நிலையம்.

குளிரிலும் கோடையிலும்

குளிர்க்காலத்தில் வானிலை இனிமையாக இருப்பதால், பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அக்காலத்திலேயே இந்த பட்டணத்திற்கு பயணம் செய்ய விரும்புகிறார்கள். கோடையின் சுட்டெரிக்கும் வெயிலும், மழைக்காலத்தில் இங்கு உருவாகும் சூறாவழி புயல் காற்றும் பயணம் செய்வதை கடினமாக்குகின்றன.

மாத்தூர் தொங்கு பாலம்

மாத்தூர் தொங்கு பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. உண்மையில் இது நீரை எடுத்துசெல்ல உதவும் ஒரு குழாய். இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. அருகாமையில் இருக்கும் மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள்.

எப்படி அடைவது

திருவட்டாறில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும் இந்த பாலம் அமைந்து இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே உயரமான மற்றும் பெரிதான நீர்க்குழாய் என்னும் பெருமை இந்த பாலத்திற்கு உண்டு.

வரலாறு

1966 ஆம் ஆண்டு பஞ்சத்தில் அவதிப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதலை கொடுத்த இந்த நடவடிக்கை, இப்போது ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுலா தளமாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரிக்க சுற்றுலா துரை இந்த ஊரில் இருக்கும் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

சுற்றுலா

இந்த நீர்க்குழாயை சுற்றி இருக்கும் இடங்கள் ஆண்டு முழுவது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணமாக இருப்பதற்காக அவை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த குழாயின் மையப்பகுதியில் நின்றுகொண்டு பசும்புல் விளைநிலங்களையும், மேற்கத்திய மலைத்தொடர்களையும், மெல்ல அசையும் புல்தரைகளையும் கண்டு ரசிக்கலாம்.



Post Comment

Post Comment