பின்னோக்கி நடைப்பயிற்சி.. கிடைக்கும் பலன்கள்.....


Posted by-Kalki Teamபின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெறும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது. தினமும் ஒரே விதமாக நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலருக்கு சலிப்பு ஏற்படும். அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெறும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரவும் வழிவகை செய்யும். சிந்தனை திறனை மேம்படுத்தும். மனதில் நல்ல யோசனைகள் உதிக்க உதவும். பார்வை திறன் மேம்படவும் துணைபுரியும்.

பின்னோக்கி நடை பயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடை பயிலுவது நல்லது. விரைவில் காயங்கள் ஆறத்தொடங்கும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்வதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும். அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடைபயில்வது பயனளிக்கும்.

எலும்புகளும், தசைகளும் வலுப்பெறுவதற்கும் பின்னோக்கி நடைபயில்வது நல்லது. உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்யும். வீட்டிலேயே பின்நோக்கி நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் டிரெட்மில் பயன்படுத்தலாம். அது சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும் அமையும். முதலில் டிரெட்மில்லில் மெதுவாக நடக்க தொடங்கி பின்னர் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.


Post Comment

Post Comment