அக்‌ஷி பீச்சுக்கு அழகிய சுற்றுலா போலாமா?


Posted by-Kalki Teamஅலிபாக்கில் மற்றுமொரு கடற்கரை அம்சம் இந்த அக்‌ஷி பீச் ஆகும். இது அலிபாக்கிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அழகான கடற்கரையில் தூய வெள்ளியை ஒத்த வெண்ணிற மணல் காணப்படுகிறது.

விளம்பர மற்றும் சினிமாப் படப்பிடிப்புகளுக்கு இது உகந்த ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது.இந்த கடற்கரை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கடற்கரையாகும். இங்குள்ள மிருதுவான மணல் மற்றும் நீரில் அலைந்து விளையாடுவது போன்றவை குழந்தைகளை வசீகரிக்கின்றன.

காதல் துணையுடன் இங்கு கடற்கரையோரம் நடப்பது, சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது போன்றவை பயணிகளுக்கு கிளர்ச்சியூட்டும் அனுபவமாகும். இந்த கடற்கரை அமைந்திருக்கும் அக்‌ஷி கிராமமும் கூட ஒரு கவர்ச்சியான இயற்கை அம்சமாகும். இங்குள்ள மீனவ மக்கள் மிகுந்த உபசரிப்பு குணமும் அன்பும் கொண்டவர்களாக உள்ளனர். அதிகம் கூட்டம் மற்றும் பரபரப்பு இல்லாமல் அமைதியும் ஏகாந்தமுமாக காணப்படுவது இந்த அக்‌ஷி கடற்கரை கிராமத்தின் சிறப்பாகும்.

அலிபாக் என்ற தன் நகரத்தின் பெயரிலேயே அறியப்படும் இந்த கடற்கரையானது அலிபாக் செல்லும் பயணிகளின் முக்கிய விருப்ப ஸ்தலமாகும். இங்கிருந்து கொலாபா கோட்டையையும் நன்றாக பார்க்க முடியும். இங்குள்ள கடற்கரை மணல் நல்ல கருமை நிறத்தில் இருப்பது ஒரு சுவாரசியமான கண்களைக் கவரும் அம்சமாகும். எல்லா பீச்களையும் போன்றே இங்கும் நிறைய உணவகங்கள் நிறைந்துள்ளன. பயணிகள் உள்ளூர் உணவு வகைகள் மற்றும் இளநீரை ருசித்தபடியே கடற்கரை அழகை மற்றும் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம். அலிபாக் படங்கள்

சுமார் 320 ஆண்டுகளுக்கு முன்பு 1678ம் ஆண்டு இந்த கண்டேரி கோட்டை கட்டப்பட்டுள்ளது. பேஷ்வா வம்சத்தினரால் இது ஆங்கிலேயருக்கு அளிக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது. அலிபாக்கில் உள்ள இந்த கோட்டை தாய் பீச்சிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு சிறு தீவின் மீது உறுதியாக இந்த கோட்டை காணப்படுகிறது. இதன் அருகாமையில் ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது. இந்த கோட்டை தற்சமயம் மும்பை துறைமுக நிர்வாக அமைப்பின் மூலம் பராமரிக்கப்படுகிறது. பயணிகள் இந்த கோட்டையின் உள்ளே சென்று பார்ப்பதற்கு மும்பை துறைமுக நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அலிபாக்கிலுள்ள இதர கடற்கரைகளைப்போலவே இந்த மண்டவா கடற்கரையும் தூய்மையான இயற்கை எழில் நிறைந்த கடற்கரையாகும். இது அலிபாக்கிலிருந்து 20 கி.மீ வடக்கே உள்ளது. இந்த கடற்கரைப்பகுதியில் பல பாலிவுட் பிரபலங்கள் தங்கள் பங்களாக்களையும் வில்லாக்களையும் கட்டியுள்ளனர். இங்கிருந்து பார்த்தால் மும்பை கேட்வே ஆஃப் இந்தியா தூரத்தில் தெரிவதைப்பார்க்கலாம். இந்த பீச்சை ஒட்டியே அமைந்துள்ள சிறு கிராமமான மண்டவா அழகிய பனை மரத்தோப்புகளை கொண்டுள்ளது. மும்பைக்கும் மண்டவா கடற்கரைக்கும் இடையே ஃபெர்ரி போக்குவரத்து வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அலிபாக் பயணத்தின்போது தவிர்க்கக் கூடாத அம்சங்களில் இந்த மண்டவா கடற்கரையும் ஒன்றாகும்.Post Comment

Post Comment