விஜய் சேதுபதியுடன் 7வது முறையாக இணைந்த காயத்ரி :


Posted by-Kalki Teamநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கிறார் காயத்ரி. #VijaySethupathi #Gayathri

‘96’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சீதக்காதி’. இப்படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அடுத்ததாக சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இவர் இதற்குமுன் விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 7வது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே சீனுராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் கூட்டணியில் ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.


Post Comment

Post Comment