செரிமான உறுப்புகளுக்கு சக்தி தரும் பூஷன் முத்திரை :


Posted by-Kalki Teamஇந்த முத்திரை உணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது. செரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.

செய்முறை :

வலது கை கட்டை விரல் நுனியுடன் ஆள்காட்டி மற்றும் நடுவிரல் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

இடது கை கட்டை விரல் நுனியுடன் மோதிர விரல் மற்றும் நடுவிரல் நுனிகள் தொட்டு இருக்க வேண்டும். ஆட்காட்டி மற்றும் சுண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

விரிப்பின் மீது சப்பணம் இட்டு அமர்ந்து 15-20 நிமிடங்கள் வீதம், ஒரு நாளைக்கு நான்கு முறை செய்யலாம்.

பலன்கள் :

உணவு செரிமானம் ஆகவும், செரித்த உணவை வெளியேற்றவும் உதவுகிறது. செரிமான உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், மண்ணீரலுக்கு சக்தி அளிக்கிறது.

நரம்புகளுக்கு ஓய்வு தருகிறது. முக்கியமாக முகத்தில் உள்ள நரம்புகள் பாதிப்பால் ஏற்படக்கூடிய வலியை (Trigeminal neuralgia) குறைக்கிறது.

வயிறு உப்பசம், வயிற்றுவலி, வாயுத்தொல்லை, மந்தமான உணர்வு நீங்கும். சுவாசப் பாதையில் உள்ள ஒவ்வாமை சீர் பெற உதவும்.

உடலுக்குப் புத்துணர்வை அளித்து, மூளைச் செயல்பாட்டைச் சீராக்கி, சோர்வைப் போக்கும்.


Post Comment

Post Comment