உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இதை செய்யுங்க போதும்...!


Posted by-Kalki Teamஉடல் குண்டானவர்கள் மெலிந்து விட வேண்டும் என்பதற்காக ஒரே அடியாக வெறுத்து பட்டினி கிடக்கக்கூடாது.உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உணவின் அளவை குறைக்க வேண்டும்

நன்கு வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்

சாப்பிட்ட உடன், ஒரு போதும் தூங்கி விடக்கூடாது. அதேப்போல வாய் நிறைய அமுக்கிக் கொண்டும் சாப்பிடக்கூடாது. சற்று நிதானமாக, சிறிது நேரம் எடுத்து மென்று சுவைத்து சாப்பிட வேண்டும். குண்டானவர்கள் பால் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். அதே நேரத்தில் ஆடை நீக்கிய பால் கொழுப்பு நீக்கிய சூப் போன்றவற்றை பருகலாம். எண்ணியில் வறுத்த பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.

இடைப்பட்ட நேரங்களில் நண்பர்களிடம் பேசிக்கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ உணவு பொருள்களை கொறிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.கூல்ட்ரிங்க்ஸ், காபி, டீ போன்றவற்றை அடிக்கடி குடிப்பதை தவிர்த்து விட்டு இளநீர், பழச்சாறு பருகும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்

முந்திரிபருப்பு, வேர்க்கடலை, சாஸ், இனிப்பு பல காரங்கள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். உடல் குண்டாக இருப்பவர்கள் இவற்றை அறவே நிறுத்தி விட வேண்டும்.உடல் எடையை மாதம் ஒருமுறை கணக்கிட்டு வர வேண்டும், மேலும் உயரத்துக்கு தகுந்தாற் போல உடல் எடையை பேண வேண்டும்Post Comment

Post Comment