பசு தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் :


Posted by-Kalki Teamபசுவை துன்புறுத்தி அதன் இறப்புக்கு காரணமாக இருந்தால் கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது. இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.

பசுவுக்கு உணவிடாமல் இருப்பது, அடிப்பது, பசுவின் இறப்புக்கு காரணமாக இருப்பது ஆகியவற்றால் ஒருவருக்கு கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது.

இதனால் பாவத்தை செய்தவர் மட்டுமல்லாமல் அவரது சந்ததியும் தொடந்து பாதிக்கும். இதற்கு பிராயச்சித்தமான மஹார்வணம் என்னும் நூலில் ஒரு பரிகாரம் கூறப்பட்டுள்ளது.

பசு ஒன்றை வாங்கி ஒரு மாதம் வரை வீட்டில் வைத்து தினமும் பசுவுக்கு நன்கு உணவளித்து பராமரிக்க வேண்டும். அதை சுதந்திரமாக நடக்க விட வேண்டும். காலையிலும், மாலையிலும் அந்த பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கி கோ பூஜை செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்த பின்னர் பசுவை தானம் அளித்து விட வேண்டும். இதனால் பசு தோஷம் நீங்கும். துன்பங்களும் படிப்படியாக குறையும்.


Post Comment

Post Comment